/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 கிராம மக்கள் திருப்பதிக்கு பயணம்: வெறிச்சோடிய கிராமங்கள்
/
10 கிராம மக்கள் திருப்பதிக்கு பயணம்: வெறிச்சோடிய கிராமங்கள்
10 கிராம மக்கள் திருப்பதிக்கு பயணம்: வெறிச்சோடிய கிராமங்கள்
10 கிராம மக்கள் திருப்பதிக்கு பயணம்: வெறிச்சோடிய கிராமங்கள்
ADDED : செப் 20, 2025 01:30 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனுார், ஜம்புகுட்டப்பட்டி, கோணனுார், சந்தம்பட்டி, மைலம்பட்டி, வலசகவுண்டனுார் உள்ளிட்ட, 10 கிராம மக்கள் ஒன்று கூடி புரட்டாசி மாதம் கடந்த, 17ல் பிறந்ததையொட்டி, திருப்பதிக்கு நடை பயணமாக நேற்று புறப்பட்டனர்.
இவர்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்து சென்று, ஏழாவது நாள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் செல்கின்றனர். அனைவரும் ஒன்று கூடி, வழியில் ஆங்காங்கே கோவில்கள், சமுதாயகூடங்கள் உள்ளிட்ட பகுதி களில், இரண்டு, மூன்று மணி நேரம் தங்கி செல்வர்.
ஒரு வாகனத்தில் அரிசி, பருப்பு, காஸ் சிலிண்டர் மற்றும் மளிகை பொருட்களை எடுத்து சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்து செல்கின்றனர். மேலும், நடை பயணமாக செல்லும் இவர்களிடம், வழி நெடுகிலும் உள்ள மக்கள் சந்தித்து, திருப்பதி கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டி, தங்களால் முடிந்த பணம் மற்றும் பொருட்களை கொடுக்கின்றனர். மேலும் கிராம மக்கள் சார்பில் தீப்பந்தம் ஏந்தி, அதை அணையாமல் திருப்பதி செல்லும் வரை பாதுகாத்து, அங்கு தீபம் மற்றும் கற்பூரம் ஏற்ற தீப்பந்தத்தை பயன்படுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
அனைவரும் திருப்பதிக்கு புறப்பட்டதால், 10 கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இப்பகுதியில், இரவு ரோந்து பணியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.