/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு
/
100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு
ADDED : ஏப் 02, 2024 04:32 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி, ஏ.பள்ளிப்பட்டியில் தினமும் சந்தை கூடுகிறது, இச்சந்தைக்கு பாப்பிரெட்டிப்பட்டி, சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் வருகின்றனர்.
நேற்று மாலை, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வலியுறுத்தி, பொது மக்களிடையே துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து ஏ.பள்ளிப்பட்டி அதிகாரப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிராமங்களில் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.

