/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழங்குடி மக்களுக்கு 102 வீடுகள்: பாதியில் பணி நிறுத்திய கான்ட்ராக்டர் ஓட்டம்
/
பழங்குடி மக்களுக்கு 102 வீடுகள்: பாதியில் பணி நிறுத்திய கான்ட்ராக்டர் ஓட்டம்
பழங்குடி மக்களுக்கு 102 வீடுகள்: பாதியில் பணி நிறுத்திய கான்ட்ராக்டர் ஓட்டம்
பழங்குடி மக்களுக்கு 102 வீடுகள்: பாதியில் பணி நிறுத்திய கான்ட்ராக்டர் ஓட்டம்
ADDED : ஆக 02, 2025 09:47 PM

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, 102 வீடுகள் கட்டும் பணியை, ஒப்பந்ததாரர் பாதியில் நிறுத்தி சென்றதால், மக்கள் தவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், தொட்டமஞ்சு பஞ்.,க்குட்பட்ட, கொடகரை மலை கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள், 40 ஆண்டுகளை கடந்து மோசமான நிலையில் இருந்தது. அவற்றை இடித்து விட்டு, தாட்கோ மூலம் புதிய வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 2024 - 25ல், பழங்குடி மக்களுக்கு வீடுகள் திட்டத்தில் தலா, 5.73 லட்சம் ரூபாய் மதிப்பில், 5.84 கோடி ரூபாய் மதிப்பில், 102 வீடுகள் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
அனைத்து வீடுகளுக்கும் ஜன்னல், கூரை மட்டம் வரை பணிகளை செய்து விட்டு, மூன்று மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரருக்கு இரண்டு தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் பணியை தொடர்ந்து செய்யாமல் நிறுத்தி சென்றுள்ளார்.
பழைய வீடுகளை இடித்து விட்டதால், பழங்குடியின மக்கள் தற்காலிகமாக குடிசையில் வசிக்கின்றனர். அதற்குள் பாம்புகள் அடிக்கடி படையெடுத்து வருகின்றன.
அதிகாரிகள் கூறுகையில், 'கலெக்டர் தினேஷ்குமார், கொடகரையில் ஆய்வு செய்தபோது, இரு தவணை தொகையை ஒப்பந்ததாரர் வாங்கி, மேற்கொண்டு பணியை செய்யாமல் சென்றது தெரிந்தது.
வேலுார் தாட்கோ இணை இயக்குநர் நேரில் விளக்கமளிக்க, தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், வீடுகளை கட்டி முடிக்க, தளி பி.டி.ஓ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்' என்றனர்.