/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் காணொலியில் முதல்வர் துவக்கம்
/
நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் காணொலியில் முதல்வர் துவக்கம்
நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் காணொலியில் முதல்வர் துவக்கம்
நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் காணொலியில் முதல்வர் துவக்கம்
ADDED : ஆக 03, 2025 12:49 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்த
வாறு, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் ஆகியோர், மருத்துவ முகாமை ஆய்வு செய்து, மக்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனையை பார்வையிட்டனர்.
முகாமில் ரத்த பரிசோதனை, கர்ப்பிணி
களுக்கு ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட், கண் பரி
சோதனை, முதல்வரின் விரிவான மருத்துவ
காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தொழிலாளர்களுக்கு உடல் பரிசோதனை போன்றவை, 17 சிறப்பு டாக்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மோசின்தாஜ், பார்வதி, லட்சுமி
உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் மொத்தம், 1,962 பேர் பதிவு செய்து பரிசோதனை செய்தனர். அவர்
களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படுபவர்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ
மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மாவட்டத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தலா, 3 முகாம்கள் வீதம், 10 ஒன்றியத்தில் மொத்தம், 33 முகாம்களும், ஓசூர் மாநகராட்சியில், 3 முகாம்களும் நடக்க உள்ளன.