/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1,052 மது பாட்டில் பறிமுதல் தந்தை, மகன் தலைமறைவு
/
1,052 மது பாட்டில் பறிமுதல் தந்தை, மகன் தலைமறைவு
ADDED : ஏப் 06, 2024 01:53 AM
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார்,
சிங்காரப்பேட்டையில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது,
அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் படி, சிங்காரப்பேட்டை அம்பேத்கர்
நகரை சேர்ந்த தமிழ்வாணன் என்பவருடைய வீட்டில், அதிரடி சோதனை
மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதியின்றி, 1,052 மதுபான
பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், சிங்காரப்பேட்டை போலீஸ்
ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர்
சந்திரகுமார், மதுபாட்டில்களை பதுக்கி வைத்த தமிழ்வாணன், 42, அவரது
தந்தை ரங்கன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, தலைமறைவான இருவரையும்
தேடி வருகின்றனர். தலைமறைவான தமிழ்வாணன், முன்னாள் ராணுவ வீரர்
என்பது குறிப்பிடத்தக்கது.

