/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'108' அவசர கால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
'108' அவசர கால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
'108' அவசர கால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
'108' அவசர கால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2026 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, 108 அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 2025 - 26ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை முழுமையாக வழங்க வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கையை தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். இதில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.