sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'லேப்டாப்'

/

கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'லேப்டாப்'

கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'லேப்டாப்'

கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'லேப்டாப்'


ADDED : ஜன 08, 2026 04:54 AM

Google News

ADDED : ஜன 08, 2026 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், கல்லுாரி மாணவ, மாணவியர், 766 பேருக்கு 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் தலைமை வகித்து, மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும், 4,522 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி திட்ட அலுவலர் அருள்மொழி தேவன், பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ் குமார், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் காயத்திரி தேவி கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு, அரசின் விலையில்லா, 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தில், ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்கள் மற்றும் தளி அரசு கலை, அறிவியல் கல்லுாரி, கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும், 649 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா 'லேப்டாப்'களை வழங்கினர்.

ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் சரவணன் நன்றி கூறினார். தமிழ்த்துறைத்தலைவர் பாத்திமாகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us