/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.24 லட்சம் நலத்திட்ட உதவி
/
25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.24 லட்சம் நலத்திட்ட உதவி
25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.24 லட்சம் நலத்திட்ட உதவி
25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.24 லட்சம் நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 09, 2024 06:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.
இதில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன், 242 மனுக்களை அளித்தனர். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா 1.05 லட்சம் ரூபாய் வீதம், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு, 7.35 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளும், 2 லட்சம் மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு விபத்து மரண உதவித்தொகையும், தலா, 17,000 ரூபாய் வீதம், 17 மாற்றுதிறனாளிகளுக்கு, 2.89 லட்சம் ரூபாய் மதிப்பில் இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித்தொகை என மொத்தம், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, 12.24 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.