/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : நவ 29, 2024 01:36 AM
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற
12.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி, நவ. 29-
கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற, 12.7 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சேலம் டி.எஸ்.பி., வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள், மற்றும் போலீசார் கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 254 மூட்டைகளில், 12,700 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிந்தது.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலம், பங்கார்பேட்டை பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து, 12,700 கிலோ ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டை சேர்ந்த சரவணன், 33, என்பவரை கைது செய்தனர்.