/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேன் கவிழ்ந்து விபத்து 13 தொழிலாளர்கள் காயம்
/
வேன் கவிழ்ந்து விபத்து 13 தொழிலாளர்கள் காயம்
ADDED : மே 30, 2025 01:09 AM
அஞ்செட்டி :அஞ்செட்டி அடுத்த சீங்கோட்டையை சேர்ந்தவர் கோபி, 45, வேன் டிரைவர். இவர் வேனில் தாம்சனப்பள்ளி பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்றார்.
அந்த வாகனம் திருமுடக்கு என்னும் இடத்தில், எஸ் வளைவு ஒன்றில் திரும்பிய போது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வேனில் சென்ற தாம்சனப்பள்ளி மற்றும் சீங்கோட்டை பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்கள், 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்கு அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.