/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் 1.38 லட்சம் குடும்பங்கள் சேர்ப்பு
/
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் 1.38 லட்சம் குடும்பங்கள் சேர்ப்பு
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் 1.38 லட்சம் குடும்பங்கள் சேர்ப்பு
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் 1.38 லட்சம் குடும்பங்கள் சேர்ப்பு
ADDED : செப் 16, 2025 02:13 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில், 1.38 லட்சம் குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மதியழகன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஜூலை, 1ல், முதல்வர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை தொடங்கி வைத்தார். துவங்கிய, 70 நாளில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தமிழகத்திலுள்ள, 68,000 ஓட்டுச்சாவடிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டையும் சந்தித்துள்ளோம். இந்த இயக்கத்தில் இணைந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில், 1.38 லட்சம் குடும்பங்களை சேர்த்துள்ளோம்.
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம், 2ம் கட்டம் துவங்கியுள்ளது. அண்ணாதுரை பிறந்த நாளில்,'ஓரணியில் தமிழ்நாடு' ஓட்டுச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழிவு கூட்டங்கள் நடந்தது. வரும், 17ல், கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் இருந்து முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முதல்வரால் நிறைவேற்றப்பட உள்ளது. அடுத்ததாக, 20, 21ல், மாவட்ட அளவில், 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான கூட்டம் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.