ADDED : பிப் 01, 2024 03:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சீனப்பா, 70, விவசாயி; இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து, அரசு வழங்கிய ஆடுகள் உட்பட மொத்தம், 20 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு, வீட்டிற்கு துாங்கச் சென்றார். அதிகாலையில் ஆடுகள் சத்தம் போட்டதால் கொட்டகைக்கு வந்து பார்த்தார். அப்போது குட்டிகள் உட்பட மொத்தம், 14 ஆடுகள் நாய்கள் கூட்டம் கடித்து இறந்து கிடந்தன. மற்ற, 6 ஆடுகள் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. கால்நடை மருத்துவர் உதவியுடன், அந்த ஆடுகளுக்கு சீனப்பா சிகிச்சையளித்து வருகிறார். உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு தர, அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.