/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 14 பேர் கைது
/
புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 14 பேர் கைது
ADDED : டிச 16, 2024 02:44 AM
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, என போலீசார் கண்காணித்து வரு-கின்றனர்.
இதில், குட்கா விற்பனை செய்ததாக, கிருஷ்ணகிரி ராமு, 41, மகாராஜகடை முனிகுமார், 63, ஓசூர் தொரப்பள்ளி நசீர், 50, உள்பட மொத்தம், 11 பேரை போலீசார் கைது செய்-தனர். அவர்களிடமிருந்து, 26,000 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். இதே போல், லாட்டரி விற்றதாக கிருஷ்ண-கிரி பாரதியார் நகர் சீனிவாசன், 39, செந்தில், 45, முருகன், 45, ஆகிய, 3 பேரை கைது செய்த போலீசார், 390 ரூபாயை பறி-முதல் செய்தனர். மத்திகிரி போலீசார் தளி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு சேவல் சண்டை போட்டி நடத்திய கெலமங்-கலம் முனிராஜ், 30, பேளகொண்டப்பள்ளி திம்மராஜ், 25, ஆகிய, 2 பேரை கைது செய்து, 6,600 ரூபாய் மற்றும் ஸ்கூட்-டரை பறிமுதல் செய்தனர்.

