/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
/
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.,பள்ளியிலுள்ள ஆனந்தவல்லி அம்பிகா சமேத அகத்தீஸ்வர சுவாமி கோவிலின், 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்-துடன் துவங்கியது.
மாலை, ருத்ரயாகமும், நேற்று காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, அகத்தி-யருக்கு பக்தர்களின் கைகளால் அபிஷேகம் நடந்தது. பின்னர், யோகினி சீதாம்மாவின் படத்-திறப்பு, அகத்தீஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு மகேஸ்வர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்-தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், 500 சாதுக்களுக்கு அன்னம் வழங்கி, சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திர தானம் மற்றும் தட்சணை வழங்குதல், மாலை, 5:00 மணிக்கு, அம்மை அப்பனுக்கு திருக்கல்யாணம், இரவு, 8:00 மணிக்கு மேல், கல்யாண உற்சவம் நடந்தது. இதில், மகாராஜா - ராணி அலங்கா-ரத்தில், தாரை தப்பட்டை மற்றும் வாணவேடிக்-கையுடன் நகர்வலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.