/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கல்லுாரி மாணவியருக்கு 15 நாள் தொல்லியல் பயிற்சி
/
அரசு கல்லுாரி மாணவியருக்கு 15 நாள் தொல்லியல் பயிற்சி
அரசு கல்லுாரி மாணவியருக்கு 15 நாள் தொல்லியல் பயிற்சி
அரசு கல்லுாரி மாணவியருக்கு 15 நாள் தொல்லியல் பயிற்சி
ADDED : மே 23, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி, மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு மகளிர் கல்லுாரி இளங்கலை தமிழ், வரலாறு மற்றும் தர்மபுரி சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரி இளங்கலை வரலாறு, 2ம் ஆண்டு பயிலும், 50 மாணவியருக்கு, 15 நாள் கல்வியிடை தொல்லியல் பயிற்சி நேற்று துவங்கியது. அரசு அருங்காட்சியக ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் பயிற்சி
அளித்தார். அப்போது, பழந்தமிழ் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும், மனிதகுல வரலாற்றுக்கு முந்தைய காலம் மற்றும் எழுத்து பயன்பாட்டிற்கு வந்தபின் தோன்றிய வரலாற்று காலம், அப்போது வாழ்ந்த மனிதர்களின் பண்பாடு, அவர்கள் பயன்படுத்தி, இன்று நாம் கண்டறிந்துள்ள பானை ஓடுகள், செங்கல் கட்டுமானங்கள் குறித்தும், சங்க இலக்கியங்கள் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது, அந்த எழுத்துக்களின் வளர்ச்சி தொடர்பாக மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.மேலும், தமிழ் எழுத்துக்களின் ஆரம்ப வடிவமான குறியீடுகள் மற்றும் தமிழி எழுத்துக்களை குறிப்பிட்டு, பின் தமிழி எழுத்துகள் எழுதும் முறைகள் பற்றி பயிற்சி அளித்தார். தொடர்ந்து, மாணவியர் தங்களின் பெயர்களை, 2,500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய தமிழி எழுத்துகளில் எழுதி காண்பித்தனர்.
இதில், அருங்காட்சியகம் தொடர்பாக காப்பாட்சியர் சிவக்குமார் பயிற்சி அளித்தார். மாவட்டத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் குறித்து, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் விவரித்தார். கள ஆய்வு விபரங்களை ஆவணப்படுத்துதல் குறித்து, வரலாற்று ஆர்வலர் மனோகரன் விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை, அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.