/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்
/
அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்
அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்
அரசு நிலத்தில் கட்டியிருந்த 15 வீடுகள் இடித்து அகற்றம்
ADDED : நவ 10, 2024 01:12 AM
அரசு நிலத்தில் கட்டியிருந்த
15 வீடுகள் இடித்து அகற்றம்
ஓசூர், நவ. 10-
ஓசூரில் வாக்கில் லேஅவுட் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியை ஒட்டிய அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி, வாடகைக்கு விட ஏற்பாடு செய்திருந்தனர். இது குறித்து, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்காவிற்கு புகார் சென்றது. அவர் கடந்த வாரம் ஆய்வு செய்து, வீடுகள் முறைகேடாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தார். இதையடுத்து, வீடுகளை இடித்து அகற்ற, தாசில்தார் சின்னசாமிக்கு அவர் உத்தரவிட்டார். அவரது தலைமையிலான வருவாய்த்துறை ஊழியர்கள், நேற்று பொக்லைன் வாகன உதவியுடன், 15 வீடுகளை இடித்து அகற்றினர். அப்போது பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.