ADDED : டிச 03, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கீழ் குப்பம் பஞ்., புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுரங்கம்
சித்ரா தம்பதியருக்கு சொந்தமான, 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக
பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த
கனமழையால் ஏரியி-லிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரில் பட்டியில்
அடைக்கப்-பட்டு இருந்த, 15 ஆடுகளும் அடித்து செல்லப்பட்டு பலியாகின.