sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாவட்டத்தில் 16.60 லட்சம் வாக்காளர்கள்

/

மாவட்டத்தில் 16.60 லட்சம் வாக்காளர்கள்

மாவட்டத்தில் 16.60 லட்சம் வாக்காளர்கள்

மாவட்டத்தில் 16.60 லட்சம் வாக்காளர்கள்


ADDED : ஜன 07, 2025 01:07 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில், 16,60,850 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த, 2024 அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள, 1,096 இடங்களில் அமைந்துள்ள, 1,896 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களிடமிருந்து, பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக கடந்த நவ., 28 வரை சிறப்பு முகாம்கள், இணையதளம் மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டார்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், 8,31,405 ஆண்கள், 8,29,139 பெண்கள், 306 இதரர் உள்பட, 16,60,850 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் படி, 31,873 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், 8,180 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில், 18 வயது நிறைவடைந்த, 29,060 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் நகராட்சி, தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, வாக்காளர்கள் தங்கள் பதிவுகளை சரிபார்த்து கொள்ளலாம். சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் தங்கள் பெயர்களை சேர்க்க இயலாதவர்கள், இன்று முதல், நடக்கும் தொடர் சுருக்க முறை திருத்தத்தில் Voters Helpline App மற்றும் voters.eci.gov,in என்ற இணையள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்தகுமார், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், தாசில்தார்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

சட்டசபை தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்

ஊத்தங்கரை (தனி) 1,24,256 1,24,686 54 2,48,996

பர்கூர் 1,25,155 1,28,809 19 2,53,983

கிருஷ்ணகிரி 1,37,139 1,43,060 56 2,80,255

வேப்பனஹள்ளி 1,33,099 1,29,747 40 2,62,886

ஓசூர் 1,82,482 1,78,836 93 3,61,411

தளி 1,29,274 1,24,001 44 2,53,319






      Dinamalar
      Follow us