ADDED : ஆக 23, 2026 02:52 AM
பாகலுார்: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே, பெலத்துார் முனீஸ்-வரன் கோவில் அருகே, பல லட்சம் ரூபாய் வைத்து, சூதாட்டம் நடப்பதாக, மாவட்ட எஸ்.பி., அனிதாவிற்கு நேற்று தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் படி, சூளகிரி இன்ஸ்பெக்டர் சுல்-தான்பாஷா தலைமையில், 14 பேர் கொண்ட தனிப்படை போலீசார், உள்ளூர் மக்களை போல், லுங்கி மற்றும் சட்டை அணிந்து சாதாரண உடையில், சூதாட்டத்தை வேடிக்கை பார்ப்-பது போல் அங்கு சென்றனர்.
பின்னர், அதிவிரைவுப்படையினரை வரவழைத்து, சூதாட்ட கும்-பலை சுற்றி வளைத்து, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா, 31, வசந்தகுமார், 39, யோகானந்தா, 39, சந்திரப்பா, 45, ஷஸ்வந்த், 40, மற்றும் தர்மபுரியை சேர்ந்த கோவிந்தசாமி, 40, உட்பட, 17 பேரை கைது செய்து, பாகலுார் ஸ்டேஷனில் ஒப்ப-டைத்தனர். அவர்களிடமிருந்து, 17 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு கார், 15 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், சூதாட்ட கும்பலுக்கு தகவல் சென்று விடும் என்பதால், மாவட்ட எஸ்.பி., அனிதா, தனக்கு நம்பிக்கையான தனிப்படை மூலம், சூதாட்ட கும்பலை பிடிக்க வைத்துள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
