ADDED : ஆக 23, 2026 02:51 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை எதிரே, 65 வயது மதிக்கத்தக்க முதி-யவர் கடந்த, 20ம் தேதி காலை, 11:35 மணிக்கு, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக வந்த மாருதி ஜிக்மா கார், முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டு அன்றிரவு உயிரிழந்தார்.ஓசூர் அச்செட்டிப்பள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி புகார் படி, விபத்தை ஏற்படுத்தியதாக, காரை ஓட்டி சென்ற கேரளாவை சேர்ந்த மிதின் நெக்சன், 35, என்பவர் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இவர், பெங்களூ-ருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் பலி-யான முதியவர் குறித்து விசாரித்தபோது, ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்த சின்னசாமி, 65, என்பது நேற்று தெரிந்தது.
