/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1.70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
/
1.70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
ADDED : மே 16, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் கோதண்டராமர் கோவிலுக்கு கடந்த, 1909ல் வழங்கிய நிலத்தில், 1.70 ஏக்கர் நிலம், தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறித்து அறநிலையத்துறை அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என, அனைவரிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டு, கோவில் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்ய கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார். கோவில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்த நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.