/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு கிருஷ்ணகிரியில் 13,978 பேர் கூடுதலாக சேர்ப்பு
/
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு கிருஷ்ணகிரியில் 13,978 பேர் கூடுதலாக சேர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு கிருஷ்ணகிரியில் 13,978 பேர் கூடுதலாக சேர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு கிருஷ்ணகிரியில் 13,978 பேர் கூடுதலாக சேர்ப்பு
UPDATED : அக் 30, 2024 05:50 AM
ADDED : அக் 30, 2024 01:11 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக, 13,978 பேர் அதிகரித்துள்ளதாக, கலெக்டர் சரயு கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு நேற்று வெளியிட்டு பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த மார்ச், 27ல், வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தமாக 16,23,179 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், 8,21,047 ஆண்கள், 8,15,806 பெண்கள் மற்றும், 304 இதரர் என மொத்தம், 16,37,157 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பட்டியலிலிருந்து, 13,978 பேர் தற்போது அதிகரித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வரும் நவ., 28 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
இதற்கான சிறப்பு முகாம்கள் நவ., 16, 17 மற்றும் நவ., 23, 24, ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கும்.
ஓட்டுச்சாவடிக்கு செல்ல முடியாதவர்கள், http://www.voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வரும், 2025, ஜன., 1ல், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும், 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில், சந்தேகம் இருப்பவர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., உதவி வாக்காளர் அலுவலர்கள், மற்றும் தாசில்தார் அலுவலகங்களை தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், தனி தாசில்தார் (தேர்தல்) சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.