/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெள்ளத்தால் என்.ஹெச்.,சில் 18 மணி நேரம் 'டிராபிக் ஜாம்' ; அணிவகுத்த வாகனங்களால் தவியோ தவிப்பு

ADDED : அக் 25, 2024 08:10 AM
கிருஷ்ணகிரி: மழை வெள்ளத்தால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், 18 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர், பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு-கின்றன. தற்போது போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்-லுாரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்-பள்ளி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, சிப்காட் ஜங்ஷன் வரை, 13 கி.மீ., தொலைவில் ஆறு இடங்-களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் போக்கு-வரத்து நெரிசல் தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல், நேற்று காலை வரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. மேம்பால கட்-டுமான பணி நடக்கும் பகுதிகளில் மண் சரிவால், சாலையில் மண்ணுடன் மழைநீர் சேர்ந்து சகதி-யானது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றன. மேம்பால பணி நடக்கும், 13 கி.மீ., தொலைவுக்கு ஆயிரக்கணக்கான வாக-னங்கள் நெரிசலில் சிக்கின. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரியை அடைய, 3 மணி நேரத்துக்கும் மேலானது. போக்குவரத்து நெரிசல் நேற்று மாலை, 5:00 மணி வரை நீடித்ததால், வாகன ஓட்-டிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிக்கு ஆளா-கினர்.