/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,842 பேருக்கு சிகிச்சை
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,842 பேருக்கு சிகிச்சை
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,842 பேருக்கு சிகிச்சை
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,842 பேருக்கு சிகிச்சை
ADDED : நவ 16, 2025 02:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்-துவ முகாம் நடந்தது. இதை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதி-யழகன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறு-கையில், ''இந்த முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம், 1,842 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் உயர் சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் முதல்வர் காப்-பீடு திட்டத்தில், மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்-டுள்ளது,'' என்றார்.தொடர்ந்து, 46 மாற்றுத்திறனாளி
களுக்கு தேசிய அடையாள அட்டைகள், தொழிலாளர் நலத்துறை சார்பாக, 3 கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூ-தியம் பெறுவதற்கான ஆணைகள் வழங்கி, 2 நபர்களுக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், செயற்கை கால் அள-வீடு செய்யும் பணிகளை பார்வையிட்டார். மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முரு-கேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

