/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது
/
அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது
ADDED : நவ 16, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த கப்பல்வாடியை சேர்ந்தவர் தேவகி, 60. இவர் கடந்த, 13ல், சொந்த வேலையாக கிருஷ்ணகிரி வந்தார். பணி முடிந்து அன்று மாலை கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார்.
பழையபேட்டையிலிருந்து ஐந்துரோடு செல்லும் சாலையில் சென்ற போது, பஸ்சை டிரைவர் அலட்சியமாக ஓட்டியதால், தேவகி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.இது குறித்து, அவர் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், பஸ்சை அலட்சியமாக ஓட்டிய, சுபேதார்மேட்டை சேர்ந்த பஸ் டிரைவர் பிரான்சிஸ், 59, என்பவரை கைது செய்-தனர்.

