/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 சிறுவர்கள் உட்பட 6 பேர் தேனீக்கள் கொட்டி காயம்
/
2 சிறுவர்கள் உட்பட 6 பேர் தேனீக்கள் கொட்டி காயம்
ADDED : நவ 16, 2025 02:44 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, பென்சுப்-பள்ளியை சேர்ந்த மாரப்பா, 50. விவசாயி. மல்லசந்திரத்தில் ரோஜா நர்சரி பண்ணை வைத்து பராமரித்து வருகிறார்.
இங்கு, அதே பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி, 35, அவரது மனைவி மது, 28, மற்றும் கலகோபசந்திரத்தை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ரத்தினம்மா, 55, ஆகியோர் நேற்று வேலைக்கு சென்-றனர்.காலை, 9:00 மணிக்கு, ரோஜா செடிகளுக்கு மருந்து அடித்த-போது, அப்பகுதியில் உள்ள தென்னை மரத்திலிருந்து கலைந்த தேனீக்கள், சிரஞ்சீவி, மது, ரத்தினம்மா மற்றும் அருகிலுள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராமச்சந்திரம் கிரா-மத்தை சேர்ந்த சம்பத், 35, மற்றும் சிரஞ்சீவி - மாது தம்ப-தியின் மகன்
கிரண், 11, மகள் ஜானுஸ்ரீ, 7, ஆகிய, 6 பேரை கொட்டியது.
இதில் காயமடைந்த அனைவரும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டனர். தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் கிரண், 6ம் வகுப்பும், ஜானுஸ்ரீ, அரசு துவக்கப்பள்ளியில், 2ம் வகுப்பும் படிக்கின்றனர். தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

