/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலி நியமன ஆணை தந்து மோசடி செய்த 2 பேர் கைது
/
போலி நியமன ஆணை தந்து மோசடி செய்த 2 பேர் கைது
ADDED : பிப் 17, 2025 03:21 AM
கிருஷ்ணகிரி: தபால் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலி ஆணை கொடுத்து, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, பாரூர் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரை அடுத்த வாடமங்கலத்தை சேர்ந்தவர் ரம்யா, 32; போச்சம்பள்ளியை அடுத்த பாப்பனுாரை சேர்ந்த சுபாஷ், 42, கீழ்குப்பம் சுரேஷ், 40, ஆகியோர், தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக, 10 லட்சம் ரூபாய் பெற்-றுள்ளனர். இருவரும் பணி நியமன ஆணையும் கொடுத்து, புது-டில்லியில் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதை நம்-பிய ரம்யா, புதுடில்லி சென்று விசாரித்தபோது, போலி நியமன ஆணை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து பாரூர் போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார் சுபாஷ், சுரேஷை கைது செய்தனர்.