/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காரில் 107 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது
/
காரில் 107 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜூலை 04, 2025 01:10 AM
ஓசூர், ஓசூர் வழியாக காரில் கடத்த முயன்ற, 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் அமீரியா ஜங்ஷன் அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 107 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து, 78,640 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், 1,000 ரூபாய் மதிப்புள்ள மது பாக்கெட்டுகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டிவந்த திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த சுகுமார், 31, உடனிருந்த காஞ்சிபுரம் மாவட்டம், பழவந்தாங்கல்லை சேர்ந்த பார்த்திபன், 31 ஆகியோரை கைது செய்தனர்.