நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாக்கிய 2 பேர் கைது
ஓசூர், டிச. 27-
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அபுஜித் சிங் சவுத்ரி, 22. இவர் ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி ராஜாஜி நகரில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 24ல், பேடரப்பள்ளி சிவன் கோவில் பக்கமாக சென்றபோது, பின்னால் ஸ்கூட்டரில் வந்த, 2 பேர் ஹாரன் அடித்தவாறு அபுஜித்தை வழிவிடுமாறு கூறினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் அபுஜித்தை கட்டையால் தாக்கினர். மேலும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அபுஜித் அளித்த புகார்படி ஓசூர் சிப்காட் போலீசார் கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியை சேர்ந்த சசிக்குமார், 31, பள்ளூரை சேர்ந்த அஜய், 19, ஆகியோரை கைது செய்தனர்.