/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது
/
பைக் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது
ADDED : ஜூன் 03, 2024 07:18 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்தில் கடந்த, 6 மாதமாக விலை உயர்ந்த பைக்குகள் தொடர்ந்து திருட்டு போனது.
இதனால், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஓசூர் பகுதியில் ரோந்து பணியில் நேற்று தனிப்படை போலீசார் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் வந்த, ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால், போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தர். இதில், ஓசூர் பகுதியில் தொடர் பைக் திருட்டில் அவர்கள் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.