ADDED : ஆக 10, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த விவசாயி அலமேலு, 53. மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சல் முடித்து, தன் வீட்டின் அருகே கட்டி விட்டு சென்றார்.
அன்று நள்ளிரவு, 12:30 மணியளவில், பெங்களூருவில் இருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த அலமேலு வீட்டின் மீது பாய்ந்தது. இதில் அவரது வீடு சேதமடைந்து, மேலும், வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த, 2 பசு மாடுகள் மீது கார் மோதியதில், அவையும் பலியாகின. காரில் பயணித்த டிரைவர் உட்பட, 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.