sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் இயற்கை முகாம்

/

பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் இயற்கை முகாம்

பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் இயற்கை முகாம்

பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் இயற்கை முகாம்


ADDED : ஜன 14, 2026 07:33 AM

Google News

ADDED : ஜன 14, 2026 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த, 50 மாணவ, மாணவியருக்கு இரண்டு நாள் இயற்கை முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 10 பள்ளிகளில் இருந்து தலா, 5 மாணவர்கள் வீதம் மொத்தம், 50 மாணவ, மாணவிய-ருக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த இயற்கை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த, 8, 9 தேதிகளில் அய்யூர் சுற்றுச்சூழல் பூங்கா, மேலகிரி புத்தாக்கல் மையம் பகுதிகளில் முகாம் நடத்தப்பட்-டது. ஓசூர் வன உயிரின காப்பாளர் மகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமாதேவி, கவுசர் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

இதில், 10 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் மற்றும் பறவை-யியல் ஆராய்ச்சியாளர் விஜயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்-கிணைப்பாளர் தீர்த்தகிரி ஆகியோர் கலந்து கொண்டு இப்பகுதி-களில் அரிய வகை பறவைகளை பார்த்தல், இயற்கை வளங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு வகுப்புகள் எடுத்தனர். அனை-வருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

மாவட்ட சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் வெங்கடேசன், கதி-ரவன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், தலைமை ஆசிரியர்கள் நளினி, குறள்வாசுகி, பள்ளி துணை ஆய்-வாளர்கள் சுதாகர், ஜெயராமன், பசுமை தோழன் கோகுல் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us