தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்

2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்

2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்


ADDED : அக் 02, 2026 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீர் குழாய் மாற்றியமைக்கும், பராமரிப்பு பணிகள் காரணமாக, 2 நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெகடர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்-கலம், சூளகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காடுசெட்டிப்பட்டி, பெரியதப்பை அருகிலுள்ள என்.ஹெச்., 844 தேசிய நெடுஞ்-சாலை பகுதியில், 800 எம்.எஸ்., அளவுள்ள குடிநீர் குழாய்கள் பராமரிப்பு மற்றும் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்-பட உள்ளன.

இப்பணியால் இன்றும் (2-ம் தேதி), நாளையும் (3-ம் தேதி) தேன்-கனிக்கோட்டை, கெலமங்கலம் டவுன் பஞ்.,கள், ஓசூர் ஒன்றி-யத்தில், 26 பஞ்.,கள், சூளகிரியில், 32, கெலமங்கலம், 22, தளி, 50 பஞ்.,களில் ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே இந்த, 2 நாட்களுக்கு பொதுமக்கள், தங்களுக்கு தேவை-யான குடிநீரை உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் பெற்று தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us