/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தக்காளி, முட்டைகோஸ் தோட்டத்தை சேதப்படுத்திய 2 யானைகள்
/
தக்காளி, முட்டைகோஸ் தோட்டத்தை சேதப்படுத்திய 2 யானைகள்
தக்காளி, முட்டைகோஸ் தோட்டத்தை சேதப்படுத்திய 2 யானைகள்
தக்காளி, முட்டைகோஸ் தோட்டத்தை சேதப்படுத்திய 2 யானைகள்
ADDED : ஆக 18, 2025 02:20 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, 2 யானைகளால் தக்காளி மற்றும் முட்டை
கோஸ் தோட்டங்கள் சேதமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, 2 யானைகள், மட்டமத்திகிரி கிராமத்திற்குள் புகுந்தன. அப்பகுதியிலுள்ள உச்-சப்பா என்பவரது விவசாய நிலத்திற்குள் சென்ற யானைகள், அரை ஏக்கர் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தின. அத்துடன், அப்பகுதி
யில் அரை ஏக்கர் முட்டை
கோஸ், அஸ்பரகஸ் பயிர்களை நாசம் செய்தன. மேலும், அப்பகு-தியில் உள்ள தனியார் பண்ணை நிலத்திற்குள் புகுந்த யானைகள், தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தின.
நேற்று காலை வரை விவசாய நிலங்களில் முகாமிட்டிருந்த யானைகளை, வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டினர். விவசாய பயிர்கள் சேதமாகி இருப்பதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். உரிய இழப்பீடு வழங்குவதுடன், யானைகள் வெளியேறாமல் தடுக்க, வனத்தை சுற்றி சோலார் வேலி அமைக்க வேண்டும் என, விவசா-யி
கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.