/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவேறு இடங்களில் 2 மாணவியர் மாயம்
/
இருவேறு இடங்களில் 2 மாணவியர் மாயம்
ADDED : அக் 17, 2024 01:09 AM
இருவேறு இடங்களில்
2 மாணவியர் மாயம்
ஓசூர், அக். 17-
ஓசூர், சூடசந்திரத்தை சேர்ந்தவர் போடியப்பா மகள் தேஜா, 19. தனியார் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங், 2 ம் ஆண்டு படிக்கிறார்; கடந்த, 14 காலை வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தாய் கவுரம்மா, 45, ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த மல்லேஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 18 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, 8:15 மணிக்கு, கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றவர் அங்கு செல்லாமல் மாயமானார். அவரது தாய் பாகலுார் போலீசில் கொடுத்த புகாரில், தேவீரப்பள்ளியை சேர்ந்த சந்து, 24, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார்
விசாரித்து வருகின்றனர்.