/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு
/
பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு
பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு
பள்ளி சத்துணவு கூடத்தில் 2 காஸ் சிலிண்டர் திருட்டு
ADDED : ஆக 07, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, பாரண்டபள்ளி அரசு தொடக்கப்பள்ளியில், 32 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியிலுள்ள சமையல் அறையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் அங்கிருந்த, 2 காஸ் சிலிண்டர்களை திருடிச்சென்றனர்.
நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்தனர். இந்நிலையில், காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்க, காலை, 9:00 மணிக்கு மேல் மாற்று காஸ் சிலிண்டர் எடுத்து வந்து, உணவு சமைத்து, காலை, 10:00 மணிக்கு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. திருட்டு சம்பவம் குறித்து, போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.