/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 கி.மீ., தார்ச்சாலை சேதம் பக்தர்கள், விவசாயிகள் அவதி
/
2 கி.மீ., தார்ச்சாலை சேதம் பக்தர்கள், விவசாயிகள் அவதி
2 கி.மீ., தார்ச்சாலை சேதம் பக்தர்கள், விவசாயிகள் அவதி
2 கி.மீ., தார்ச்சாலை சேதம் பக்தர்கள், விவசாயிகள் அவதி
ADDED : அக் 09, 2024 12:45 AM
கிருஷ்ணகிரி, அக். 9-
காலபைரவர் கோவிலுக்கு செல்லும், 2 கி.மீ., தார்ச்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால், பக்தர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்
குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில், காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, 165 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, குலதெய்வமாக வழிபடும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு, கிருஷ்ணகிரி - மகாராஜகடை சாலையில், கொத்தபேட்டாவில் இருந்து, துரை ஏரி வழியாக, 2 கி.மீ., தொலைவிற்கு தார்ச்சாலை உள்ளது. இச்சாலை கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைத்தனர். ஆனால் ஒரு ஆண்டிலேயே ஜல்லி பெயர்ந்து சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, வழியில் உள்ள நுாற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை இச்சாலை வழியாக எடுத்துச் செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பக்தர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, 2 கி.மீ., சாலையை போர்க்கால அடிப்படையில் புதிதாக அமைத்துத்தர, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

