/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டட மேஸ்திரி கொலையில் மேலும் 2 பேர் கைது; ஒருவர் சரண்
/
கட்டட மேஸ்திரி கொலையில் மேலும் 2 பேர் கைது; ஒருவர் சரண்
கட்டட மேஸ்திரி கொலையில் மேலும் 2 பேர் கைது; ஒருவர் சரண்
கட்டட மேஸ்திரி கொலையில் மேலும் 2 பேர் கைது; ஒருவர் சரண்
ADDED : ஜன 04, 2024 10:39 AM
கிருஷ்ணகிரி: தொப்பூர் அருகே, கட்டட மேஸ்திரியை அடித்து கொன்ற வழக்கில் நேற்று, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்தார்.
தர்மபுரி மாவட்டம், அரகாசனஹள்ளி பஞ்., காட்டு எர்ரப்பட்டியை சேர்ந்தவர் தேவன், 27, கட்டட மேஸ்திரி; இவர் கடந்த, 2023, டிச., 26ல் நல்லம்பள்ளி அடுத்த கெட்டுப்பட்டி பெரிய ஏரி பகுதியில் சடலமாக கிடந்தார். தொப்பூர் போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரது மொபைல்போனை திருடியதாக, ஏற்பட்ட தகராறில், தேவனை, ரஞ்சித் மற்றும் அவரது கூட்டாளிகள், 9 பேர் சேர்ந்து அடித்து கொன்றது தெரிந்தது. இவ்வழக்கில் காட்டு எர்ரப்பட்டி பிரபு, 21, பாலாஜி, 19, விஜி, 24, ரஞ்சித், 23, அனுமந்தபுரம் சுபாஷ், 24, கிருஷ்ணகிரி ஆதி, 19, ஆகிய, 6 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த காட்டு எர்ரப்பட்டியை சேர்ந்த பச்சியப்பன், 31, கோவிந்தசாமி, 29 ஆகியோரை நேற்று, தொப்பூர் போலீசார் கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய சாமிசெட்டிப்பட்டையை சேர்ந்த கணேசன், 21 என்பவர், போலீசார் தன்னை நெருங்குவதை உணர்ந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி நடுவர் நீதிமன்றம், 2ல், நீதிபதி ஸ்ரீவத்சவா முன்னிலையில் சரணடைந்தார். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.