/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
/
மண், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூலை 19, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பி.சி.,புதுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து பாரதி புகார்படி, மகராஜகடை போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து
விசாரிக்கின்றனர்.
சூளகிரி போலீசார் காமன்தொட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 6 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது-. இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர்.