/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கற்களை கடத்திய 2 வாகனம் பறிமுதல்
/
கற்களை கடத்திய 2 வாகனம் பறிமுதல்
ADDED : அக் 13, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த நல்லகானகொத்தப்-பள்ளி வி.ஏ.ஓ., கோவிந்த ராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், குருபராத்தப்பள்ளி பஸ் ஸ்டாப் மற்றும் கோனேரிப்பள்ளி ஆகிய இரு இடங்களில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஒரு யூனிட் கல் மற்றும் டிப்பர் லாரியில், 6 யூனிட் கற்களை சூளகி-ரிக்கு ஏற்றி செல்வது தெரிந்தது. இதனால், டிராக்டர், லாரி ஆகிய-வற்றை பறிமுதல் செய்த வி.ஏ.ஓ., கோவிந்தராஜ், சூளகிரி போலீசில் ஒப்படைத்தார். அவர் புகார் படி, டிரைவர்கள், உரிமை-யாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.