/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்தால் 10வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்தால் 10வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்தால் 10வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்தால் 10வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : அக் 13, 2025 02:03 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த, 9 நாட்களாக, பரவலான மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்-தது. இதனால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கடந்த, 5ம் தேதி முதல் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்
வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 7,927 கன அடி தண்ணீர் வந்தது. அணை நீர்மட்டம், 50.55 அடியாக உள்ளதால், அணைக்கு வரத்தாகும் தண்ணீர் முழுவதும் தென்-பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக மழையின்றி, நேற்று அணைக்கு நீர்வரத்து, 7,265 கன அடியாக குறைந்தது. அணையி-லிருந்து, 7,697 கன அடி நீர் திறப்பால், தென்பெண்ணை ஆற்றில், தரைப்பாலத்தை மூழ்கடித்த
படி தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணி
கள் அணை பகுதிக்கு வர, 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்-ளது. அணைக்கு தொடர்ந்து நீர் வருவதால், கிருஷ்ணகிரி, தர்ம-புரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய, 3 மாவட்டங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு, 10வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என, நீர்வளத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
* ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 3,199 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில், 3,199 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வ-ரத்து, 2,075 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயர-மான, 44.28 அடியில், 40.51 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 2,999 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து, 7 வது நாளாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் சென்றதால் வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் ரசாயன நுரையுடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.