/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி
/
வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி
வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி
வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி
ADDED : ஆக 24, 2025 12:51 AM
போச்சம்பள்ளிகிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, வாலிப்பட்டியை சேர்ந்தவர் ரகு, 35. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தின் மூலம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டின் கட்டுமான பணியை அதே பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்து வந்த நிலையில், வீட்டின் சுவர்கள் ஏழு அடி உயரத்திற்கு கட்டப்பட்டு, அதனுள் பாத்திரங்கள், பொருட்களை வைக்க சிலாப் அமைக்கப்பட்டு தொடர்ந்து கட்டுமான பணி நடந்து வந்தது.
கடந்த ஜூலை, 26ல் ரகுவின் தம்பி கேசவன், 32, மற்றும் ரகுவின், 2 வயது பெண் குழந்தை மனுஸ்ரீ ஆகியோர், கட்டுமான பணி நடந்த கட்டடத்திற்கு சென்றபோது
, சிலாப் உடைந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று அதிகாலை குழந்தை மனுஸ் உயிரிழந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.