நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், நவ. 19-
ஓசூரை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில், டிப்ளமோ இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த, 13 காலை, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தன் மகள் படிக்கும் அதே கல்லுாரியில் படிக்கும் மாணவன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்தனப்பள்ளியை சேர்ந்த, 16 வயது சிறுமி, கடந்த, 13 மாயமானார். அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், சீபம் கிராமத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் விஜய், 26, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.