/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூன் 28, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பாண்டவர் நகரை சேர்ந்த ரகு, 35, இவரது மனைவி ஆகிய இருவரும், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். இவரது தாய் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வெளியே சென்றார்.
வீட்டில் இருந்த தந்தை சின்னசாமி நேற்று மாலை 3:00 மணியளவில், வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். பிறகு 4:00 மணிக்கு வந்தபோது, பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து, 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.