/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுக்கட்சியினர் 200 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் 200 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
மாற்றுக்கட்சியினர் 200 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
மாற்றுக்கட்சியினர் 200 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 14, 2025 03:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில், அ.ம.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.
அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.ம.மு.க., நகர செயலாளர் அசோக்குமார் தலைமையில், ஒன்றிய செயலாளர் துரை, அவைத்தலைவர் முனவர், துணைச்செயலாளர் சின்ராஜ், பொருளாளர் முனிராஜ், கவுரவ தலைவர் முரளி, நகர இணை செயலாளர் எல்லம்மா, துணை செயலாளர்கள் ஈஸ்வரி, வெங்கடேசன், பொருளாளர் இளையராஜா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரமேஷ், நெச-வாளர் அணி மாவட்ட செயலாளர் ஜானகிராமன், துணை செய-லாளர் கீதாஸ்ரீ, இளைஞரணி மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் பா.ஜ., நகர வணிகர் சங்க தலைவர் ஹரி நாராயணன், நர-சிம்மன், கணபதி மற்றும், 15 வார்டுகளை சேர்ந்த வட்ட செயலா-ளர்கள் என, 200க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு, அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி, கட்சி துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை, நகர செயலாளர் கேசவன், முன்னாள் இளைஞரணி நகர செயலாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.