/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் 2000 கன அடி நீர் திறப்பு
/
கே.ஆர்.பி., அணையில் 2000 கன அடி நீர் திறப்பு
ADDED : அக் 16, 2024 02:27 AM
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் மழை, தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 642 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 841 கன அடியாக அதிகரித்தது.
மழையால் நேற்று மாலை 1280 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. கலெக்டர் சரயு அணையை பார்வையிட்டு தென்பெண்ணை ஆற்றில் 2000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை என, மூன்று மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாரூரில், 34.60 மி.மீ., மழை பதிவானது. நெடுங்கல் 26, பெணுகொண்டாபுரம் 25.20, ராயக்கோட்டை 20, கிருஷ்ணகிரி, 19.20, போச்சம்பள்ளி 17, கே.ஆர்.பி., அணை 16.20, சூளகிரி, 15, பாம்பாறு அணை, 13, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, ஓசூரில் தலா 11, கெலவரப்பள்ளி அணை, 7 மி.மீ., மழை பெய்துள்ளது.