/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20,156 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
/
20,156 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
ADDED : மார் 01, 2024 02:17 AM
கிருஷ்ணகிரி:தமிழகம்
முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை
பொருத்தவரை கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 197
பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். கிருஷ்ணகிரி
கல்வி மாவட்டத்தில், 6,213 மாணவியர், 6,049 மாணவர்கள் என, 12,262 மாணவ,
மாணவியர், ஓசூர் கல்வி மாவட்டத்தில், 4,524 மாணவியர், 3,370 மாணவர்கள்
என, 7,894 மாணவ, மாணவியர் என, மாவட்டத்தில் மொத்தம், 20,156 மாணவ,
மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக ஒதுக்கப்பட்ட தேர்வு
மையங்களில் முன்னேற்பாடு பணிகள், அடிப்படை வசதிகள் முடிக்கப்பட்டு,
தயார் நிலையில் இருப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

