/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பிக்கப்வேனில் கடத்த முயன்ற 2.10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : மே 23, 2024 07:11 AM
கிருஷ்ணகிரி : உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் சின்னசாமி மற்றும் அலுவலர்கள் சூளகிரி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அத்திமுகம் அருகே சென்ற பொலிரோ பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர்.அதில், 50 கிலோ அளவிலான, 42 மூட்டைகளில், 2,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், ஆம்பூரிலிருந்து, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திர மாநிலம் ஏ.கோட்டாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகார் படி, கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேனை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கெர்ஸமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ், 32, என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசியுடன், பிக்கப் வேனையும் பறிமுதல் செய்தனர்.