/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருது பாண்டியர்களின் 224வது குருபூஜை விழா
/
மருது பாண்டியர்களின் 224வது குருபூஜை விழா
ADDED : அக் 28, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அகமுடையார் நலச் சங்கம் சார்பில், முதல் இந்தியச் சுதந்திர போராட்ட வீரர்கள், மாமன்னர் மருது பாண்டியர்களின், 224வது குருபூஜை விழா, ஊத்தங்கரை ரவுண்டானாவில் நேற்று கொண்டாடப்பட்டது.
மாமன்னர் மருதுபாண்டியர்களின், உருவ படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை அகமுடையார் நலச்சங்க தலைவர் நல்லாசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு, மருது பாண்டியர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

