/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள், லாட்டரி விற்ற 23 பேர் கைது
/
புகையிலை பொருட்கள், லாட்டரி விற்ற 23 பேர் கைது
ADDED : செப் 30, 2024 06:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர். இதில், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர் அட்கோ, சிப்காட், மத்திகிரி, பாகலுார், பேரிகை, சூளகிரி, பர்கூர், கந்திகுப்பம், தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, சிங்காரப்பேட்டை, மத்துார் ஆகிய பகுதிகளில், புகையிலை விற்பனை செய்த, 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 3,400 ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும், 1,400 ரூபாய் மதிப்புள்ள கர்நாடகா மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி, பாகலுார், ஓசூர் நல்லுார் பகுதிகளில், கஞ்சா வைத்திருந்த, 3 பேரை போலீசார் கைது செய்து, 165 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி டவுன் போலீசார், ராசுவீதி சாய்பாபா கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற, கிருஷ்ணகிரி ஆத்துமேடுகாடு பகுதியை சேர்ந்த மணிவேலன், 40, மேல்காத்தாடிகுப்பம் ஆனந்த், 38 மற்றும் காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 39,000 ரூபாய் மதிப்புள்ள, 115 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.